உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலில் மழை வேண்டி யாகம்

பெருமாள் கோவிலில் மழை வேண்டி யாகம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் மழை வேண்டி மகாலட்சுமி யாகம் நேற்று மாலை நடந்தது.கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி  யாகம் நடத்தப்பட்டது. பெருமாள் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, விஸ்வக் சேனர் வழிபாடு, புண்ணியாவஜனத்திற்கு பின் வெள்ளி கும்பத்தில் மகாலட்சுமிக்கு உரிய மந்திரங்கள் வாசித்து ஆவாகனம் செய்யப்பட்டது. அக்னி பிரதிஷ்டை செய்து ஸ்ரீசுத்த மந்திரங்கள் வாசித்து யாகம் வளர்க் கப்பட்டது. மங்கள பொருட்களால் யாகத்தில் பூர்ணாகுதி சேர்ப் பிக்கப்பட்டது. இன்று (3ம்
தேதி) ஆடி மூன்றவாவது வெள்ளியையொட்டி தாயாருக்கு லட்சார்ச்சனை வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !