வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1371 days ago
செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் நேற்று இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதை முன்னிட்டு காலையில் வினாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 6 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. 7 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சள் தாலாட்டு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.