உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயில் விழாவில் இழுக்கப்படாத புதிய தேர்

சிவன் கோயில் விழாவில் இழுக்கப்படாத புதிய தேர்

சிவகாசி:சிவகாசி சிவன் கோயில் ஆடிதபசு விழா தேரோட்டத்தில், புதிய மரத்தேர் இழுக்கப்படாததால்,பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான விஸ்வநாதசாமி விசாலட்சி அம்மன் கோயிலில் வைகாசி விழா , ஆடி தபசு முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவின்போது முக்கிய நிகழ்சியாக தேரோட்டம் நடைபெறும். கோயில் தேரானது பழுதடைந்ததால், கடந்த ஆண்டுகளில் சிறிய தேரில் சுவாமி வலம் வரும் தேரோட்டம் நடைப்பெற்றது.இதனிடையே,கோயிலின் தெய்வீக பேரவை சார்பில், ரூ.30 லட்சம் செலவில் புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டது. இதனால்,ஆடி தபசு விழாவில் புதிய தேருடன் தேரோட்டம் நடக்கும் என பக்தர்கள் எதிர் பார்த்தனர்.ஆனால்,சிறிய தேரையே அலங்கரித்து தேர் இழுந்தனர். இது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. கோவில் நிர்வாக அதிகாரி பூவலிங்கம்,"" கோயிலில் ஆகம விதிப்படி வைகாசியில் தான் பெரிய மரத்தேர் இழுப்பது வழக்கம். ஆடிதபசுக்கு சிறியதேரை இழுப்பது வழக்கமாக உள்ளது,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !