உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு வரும் 9ல் கும்பாபிேஷகம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு வரும் 9ல் கும்பாபிேஷகம்

பொள்ளாச்சி : நெகமம், ஜோத்தம்பட்டியில், பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில், விநாயகர், முருகன், மீனாட்சி உடனமர் சுந்தரேஸ்வர் சன்னதிகள் உள்ளன. கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகம் நடத்த மக்கள் தீர்மானித்தனர்.கும்பாபிேஷகத்தையொட்டி, வரும், 7-ம் தேதி மாலை தீர்த்தம், முளைப்பாரி எடுத்தல் நடக்கிறது. 8-ம் தேதி காலை மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், தேவதா அனுக்ஞை, மஹா கணபதி ஹோமம், கோ பூஜை, பூர்ணாஹுதி, கோபுர கலசம் வைத்தல் நடக்கிறது. அன்று மாலை, 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, யந்திர ஸ்தாபனம் செய்யப்படுகிறது. 9-ம் தேதி காலை கலசம் புறப்படுதல், காலை, 10.45 மணிக்கு கோபுர கலசம் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, விநாயகர் முதலான பரிவார தெய்வங்கள் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு கும்பாபிஷேகம், அபிஷேகம், அலங்கார ஆராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !