உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூரில் திருப்பதி பெருமாள் திருக்கல்யாணம் : ஜூன் 11ல் கோலாகலம்

கரூரில் திருப்பதி பெருமாள் திருக்கல்யாணம் : ஜூன் 11ல் கோலாகலம்

திருமலை திருப்பதியில் நடைபெறும் உற்சவங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணமாகும்.

நாடு முழுவதும உள்ள பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் விருப்பப்பட்ட ஊர்களிலேயே கோவில் நிர்வாகத்தினர் நடத்திவருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பாக சென்னை தீவுத்திடலில்  சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற்றது. இப்போது இந்த ஜூன் மாதம் 11 ந்தேதி கரூரில் உள்ள அட்லஸ் கலை அரங்கில் மாலை 5:30 மணிக்கு நடத்த உள்ளனர். பக்தர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவர் திருக்கல்யாண நிறைவில் வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படும்.இதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !