உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவனூர் காளி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ விருந்து திருவிழா

காவனூர் காளி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ விருந்து திருவிழா

இளையான்குடி: இளையான்குடி அருகே காவனூர் காளி கோயிலில் நள்ளிரவில் நடைபெற்ற வினோத திருவிழாவில் அசைவ விருந்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள் மட்டுமே பங்கேற்று சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே காவனூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் தங்களது கிராம தெய்வமாகவும், நெல்லை தெய்வமாகவும் காளியை வணங்கி இங்கு வருடந்தோறும் தோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் .இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்த வருடம் 2 வருடங்களுக்குப் பிறகு திருவிழா நடப்பதால் ஏராளமான மக்கள் நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும்,நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டியும் காளியம்மன் கோயிலில் உள்ள கருப்பருக்கு 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டனர்.அதனை தொடர்ந்து பலியிட்ட ஆடுகளை அங்கேயே சமைத்து காவனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு அசைவ விருந்து பரிமாறினர்.முன்னதாக காளியம்மனுக்கும்,கருப்பனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஆண்கள் சாப்பிட்ட இலைகளை காய்ந்த பிறகு 2 நாட்கள் சென்றபின் அப்பகுதிகளை சேர்ந்த பெண்கள் எடுப்பது வழக்கமாக உள்ளது.இந்த வினோத திருவிழாவில் காவனூர் மற்றும் சாலைகிராமம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !