உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் வைகாசி விசாக விழா துவக்கம் : ஜூன் 11ல் தேரோட்டம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் வைகாசி விசாக விழா துவக்கம் : ஜூன் 11ல் தேரோட்டம்

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழாவை துவக்கத்தை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்றம் நடந்தது.

குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாக விழா பத்து நாட்கள் நடைபெறும். நேற்று முன்தினம் கொடியேற்றத்திற்கான பூர்வாங்க பூஜைகள் நடந்து கொடி படம் திருவீதி வலம் வந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் கொடிமரம் எழுந்தருளினர். நேற்று காலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜை,கலசபூஜை,ேஹாமம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிேஷக ஆராதனைகள் நடந்து கொடியேற்றம் நடந்தது. சிவாச்சார்யர்கள் ரமேஷ் குருக்கள்,பாஸ்கர குருக்கள் பூஜைகள் செய்தனர். தொடர்ந்து பஞ்சமூர்த்தகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவில் வட்டார நாயுடுமகாசன சங்கம் சார்பில் மண்டபகப்படி தீபாராதனை நடந்து சூரியபிறை, சந்திர பிறையில் சுவாமி அம்பாள் எழுந்தருளி திருவீதி வலம் வந்தனர். தினசரி இரவு சுவாமியும், அம்பாளும் வாகனங்களில் திருவீதி வலம் வருவர். மேலும் ஜூன் 6 ல் திருத்தளிநாதருக்கு மந்திர நீர் முழுக்காட்டு, ஜூன் 7 ல் திருக்கல்யாணம், ஜூன் 10 ல் நடராஜர் திருவீதி உலா, ஜூன் 11 ல் தேரோட்டம், ஜூன் 12 ல் தெப்பமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !