பரவை கோயில் களரி விழா : பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :1298 days ago
வாடிப்பட்டி: மதுரை பரவையில் பாதாள ஈஸ்வரி, இருளப்பசுவாமி கோயில் களரி விழா 2 நாட்கள் நடந்தது. அச்சம்பத்து ஏற்குடி கிராம கோவில் வீட்டிலிருந்து வைகையில் நீராடி, கரகத்துடன் பரவை கோயிலுக்கு வந்தனர். பால் பூஜை கலரி விழாவை தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சுவாமிகள் சர்வ அலங்காரம், வெள்ளிக் கரகம், பஞ்சவர்ண பெட்டியுடன் கோவில் வீடு சென்றனர். பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பூஜாரி இருளப்பபிள்ளை வகையறா, விழாக்குழுவினர் செய்தனர்.