திருமலை கோவிலுக்கு நாகாபரணம்
ADDED :4855 days ago
நகரி: திருப்பதி கோவிலுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்க நாகாபரணம் காணிக்கையாக வழங்கப்பட்டது. திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, விசாகப்பட்டனம் நகரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் வெங்கடரமணா, சந்தனா மோகன்ராவ் ஆகியோர், 40 லட்சம் ரூபாயில், தங்க நாகாபரணத்தை வழங்கினர். இக்காணிக்கையை தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி
சீனிவாசராஜூவிடம் வழங்கினர்.