உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பேட்டை கோவிலில் சாடல் திருவிழா

புதுப்பேட்டை கோவிலில் சாடல் திருவிழா

புதுச்சேரி : புதுப்பேட்டை புத்துளாய் மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் மற்றும் செடல் மகோற்சவம் கடந்த 26ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி அன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 6.30 மணிக்கு  அபிஷேகம் தீபாராதனையும் நடந்தது. 27ம் தேதி முதல் 2ம் தேதி வரை ஒவ்வொரு நாள் காலையும் அபிஷேகம், இரவு 9
மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது. 3ம் தேதியான நேற்று காலை அபிஷேக தீபாரதனை நடந்தது. மாலை 5 மணிக்கு  பக்தர்கள் செடல் போடும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, செடல் குத்தி தங்களது நேர்த்தி  கடன்களைச் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !