உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திர சுவாமி கோவிலில் ஆராதனை விழா துவக்கம்

ராகவேந்திர சுவாமி கோவிலில் ஆராதனை விழா துவக்கம்

புதுச்சேரி : குரும்பாபட்டு, ராகவேந்திர சுவாமி கோவிலில், ஆராதனை விழா, நேற்று துவங்கியது.குரும்பாபட்டு, ராகவேந்திரா  நகரில் உள்ள ராகவேந்திர சுவாமி கோவிலில் ராகவேந்திரர் ஆராதனை விழா நேற்று (3ம் தேதி) துவங்கியது. விழாவில் நேற்று  காலை 6 மணிக்கு நிர்மால்ய விஜர்சனம், 9 மணிக்கு மகா சிறப்பு அபிஷேம் நடக்கிறது. மதியம் 11 மணிக்கு கனகாபிஷேகம், 12  மணிக்கு அலங்காரம் öŒ#து, தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு ஸ்வஸ்தி, பல மந்த்ராட்சதை நடந்தது.  இன்று (4ம் தேதி), நாளை 5ம் தேதிகளிலும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

ஈரோடு ராகவேந்திர ஸ்வாமிக்கு ஆராதனை: ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்வாமிகள், 341வது ஆண்டு ஆராதன மஹோத்ஸவம், ஈரோடு அக்ரஹார வீதியில் அமைந்துள்ள பாதராஜ  மடத்தில் துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் பூஜையில், நிர்மால்ய விஸர்ஜனம், சேவா சங்கல்பம், பாத பூஜா, கனகாபிஷேகம்,  பல்லாக்கு உற்சவம் ஆகியவை நடக்கிறது. மாலையில் தேவரநாம பஜனை, கர்நாடக சங்கீதம், மஹா தீபாராதனை ஆகியவை  நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !