உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீர்காழி மந்த கருப்பண்ணசுவாமி கோயிலில் முளைபாலி திருவிழா

சீர்காழி மந்த கருப்பண்ணசுவாமி கோயிலில் முளைபாலி திருவிழா

மயிலாடுதுறை : சீர்காழி மந்த கருப்பண்ணசுவாமி  கோயிலில் உலக நன்மைக்காக முளைபாலி திருவிழா.  500க்கும் மேற்பட்ட  பெண்கள்  முளை பாரி எடுத்து சென்று வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் ஸ்ரீகருப்பண்ணசுவாமி,  ஏழைகாத்த அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உலக நன்மைக்காக முளைபாரி திருவிழா நடந்தது. முன்னதாக  ஆற்றிலிருந்து கரகம் புறப்பட்டு முளைபாலியுடன் கோவிலை வந்தடைந்தது. பின்னர் தீபாராதனை செய்விக்கப்பட்டது.பின்னர் கும்மிகோலாட்டம் நடந்தது. முளைபாரி எடுத்துக்கொண்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் கிராமிய நிகழ்ச்சிகள், கோலாட்டங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு முக்கியவீதிகளின் வழியா உப்பனாற்றை அடைந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முளைபாரிகள் உப்பனாற்றில் விடப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !