சுந்தரத்தில் சாய் பாபா பாதம் பிரதிஷ்டை
ADDED :1261 days ago
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பகவான் சத்ய சாய் பாபா கோவிலான சுந்தரத்தில் நேற்று அவரது பளிங்கு பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்காக நடைபெற்ற விழாவில் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஆர்ஜே ரத்னாகர் கலந்து கொண்டு பாதங்களைப் பிரதிஷ்டை செய்தார். சத்ய சாய் சேவா அமைப்பின் நிர்வாகிகளான பி ரமேஷ், டாக்டர் மோகன், முகுந்தன், எஸ்.ஏ .சந்திரசேகரன் மற்றும் திரளான சாய் பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று இரவு பிரதிஷ்டை செய்யப்பட்ட பகவான் சத்ய சாய் பாபாவின் பாதம் அமைந்துள்ள மண்டபத்திற்கு இன்று காலை 8 மணி அளவில் அபிஷேகம் நடைபெறுகிறது கலந்துகொண்டு பாத தரிசனம் பெறலாம்.