உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீகாளஹஸ்தியில் பங்காரு அம்மன் கோயில் திருவிழா

ஸ்ரீகாளஹஸ்தியில் பங்காரு அம்மன் கோயில் திருவிழா

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி எல்லை பகுதியில் உள்ள கைலாசகிரி காலனியில் வீற்றிருக்கும் பங்காரு அம்மன் கோயில் திருவிழா நேற்று (புதன்கிழமை) வெகு விமர்சையாக நடைபெற்றது . கிராம தேவதையாக பிரசித்தி பெற்றுள்ள பங்காரம்மனுக்கு பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை  காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர் .முன்னதாக பங்கார் அம்மன் கோயில்  திருவிழாவையொட்டி கோயிலை சிறப்பு மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தனர் . பங்காரம்மனுக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் பூஜை பொருட்கள் மற்றும் சீர்வரிசை பொருட்களை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு மற்றும் உறுப்பினர்கள் கோயில் சார்பில் சம்பிரதாய முறைப்படி ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க தலை மீது சுமந்தப்படி கொண்டு சென்று பங்காரம்மன் கோயில்  அர்ச்சகர் புருஷோத்தமனிடம் வழங்ககியதோடு பங்காரம்மனை  தரிசனம் செய்தனர்.மேலும்  பங்காரம்மன் கோயில் கமிட்டி உறுப்பினர்கள் ஜெய பாபு , ராமாஞ்சநேயலு ,விஜயசாரதி, சுதாகர் ரெட்டி உட்பட ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !