உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சடையாண்டி கோயில் விழா

சடையாண்டி கோயில் விழா

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி சடையாண்டி கோவில் வைகாசி திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. நையாண்டி மேளத்துடன் பூஜாரி அழைப்பும், ராணி மங்கம்மாள் சத்திரம் முன் கரகம் ஜோடித்து ஊர்வலமாக கோயில் வந்தனர். பக்தர்கள் பொங்கல் வைத்தும், சக்தி கிடாவெட்டியும் வழிபாடு செய்தனர். விநாயகர், அம்மன், மீனாட்சி, கருப்புசாமி உள்ளிட்ட சுவாமி அலங்கார முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்து சென்று ஒட்டான்குளத்தில் கரைத்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !