மேலூர் சக்தி பீடத்தில் மழை வளம் வேண்டி கஞ்சிக் கலய ஆன்மிக ஊர்வலம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மேலூர் சக்திபீடத்தில் மழை வளம் வேண்டியும், இயற்கை சீற்றங்கள் தனிய வேண்டியும் கஞ்சிக் கலய ஆன்மிக ஊர்வலம் நடந்தது. தூத்துக்குடி இரண்டாம் ரயில்வே கேட் அருகில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நடந்தது. இயற்கை சீற்றங்கள் தனிய வேண்டியும், மக்கள் வளமுடன் வாழவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. வேள்வியில் அறுங்கோண் சக்கரம் அமைக்கப்பட்டு 108 தேன் கிளை மாவிளக்கு ஏற்றப்பட்டது. வஸ்திக் வடிவில் 4 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தது. கலச வேள்வி பூஜையை சக்திபீட மகளிர் அணி தலைவி சரஸ்வதி மருதநாயகம் தீபம் ஏற்றி துவக்கி வைத்தார். இதனையடுத்து ஆயிரத்திற்கும் அதிகமான செவ்வாடை பக்தர்கள் மழை வளம் வேண்டி கஞ்சி கலய ஆன்மீக ஊர்வலமாக வந்தனர். 108 மகளிர் மற்றும் ஆடவர்கள் தீச்சட்டி ஊர்வலம், பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சக்திபீடம் வந்தடைந்தனர். கஞ்சி கலய ஆன்மீக ஊர்வலத்தை சக்திபீட தலைவர் முத்துக்குமார் துவக்கி வைத்தார். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த கஞ்சி அன்னைக்கு படைக்கப்பட்டு கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து அன்னை திபராசக்திக்கு பக்தர்கள் தங்கள் கரங்களால் பால் அபிஷேகம் செய்தனர். விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை சில்வா துவக்கி வைத்தார். மாலையில் கருவறையில் உள்ள அன்னை ஆதிபராசக்தி தங்க கவசத்தில் காட்சி அளித்தார். இதில் ஏரா ளமானோர் கலந்து கொண்டு அன்னைக்கு பூச்சொரிதல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை சக்திபீட பொறு ப்பாளர்கள் கள்ளபிரான், செந்தில், மாடசாமி, அங்குவிஜயன், மாவட்ட
பிரச்சாரக்குழு பொ றுப்பாளர் ராஜூ, வேள்விக்குழு பொறுப்பா ளர் கிட்டப்பா உட்பட பலர் செய்திருந்தனர்.