உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடுங்களரி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

ஆடுங்களரி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே பூங்குளம் கிராமத்தில் ஆடுங்களரி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அனுக்ஞை,மகா கணபதி பூஜை, தன பூஜை,நவக்கிரஹ,கணபதி ஹோமம்,பூர்ணாஹூதி,கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம்,முதல் கால யாகபூஜை, தீபாராதனை நடந்தது.பின்பு இரணடாம்,மூன்றாம் கால யாகபூஜை, மந்திர ஸ்தாபனம் நடந்தது.பின்பு நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜை,கோ பூஜை,நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, தீபாரதனை நடந்தது.கருட வாகன புறப்பாட்டுக்கு கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.ஆடுங்களரி அய்யனாருக்கு 21 வகையான அபிஷேகங்கள், சிறப்புபூஜைகள் நடந்தது. முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !