நாகாத்தம்மன் கோவிலில் ஆடி பெருவிழா
ADDED :4854 days ago
மறைமலைநகர் : காயரம்பேடு ஸ்ரீ நாகாத்தம்மன் கோவிலில், பத்தாம் ஆண்டு ஆடிப் பெருவிழா, வெகு சிறப்பாக நடந்தது.விழாவையொட்டி, அம்மனுக்கு மலர் அலங்காரம், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காலை 9 மணிக்கு, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பால் குடம் எடுத்து, அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.