பெரியகுளம் கோயிலில் வைகாசி விசாகம், பிரதோஷம் வழிபாடு
ADDED :1229 days ago
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் வைகாசி விசாகம் கோலாகலமாக நடந்தது. பாலசுப்ரமணியர், வள்ளி,தெய்வானையுடன் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவசுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளித்தார். பிரதோஷம்: கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.பெரியகுளம் பால சுப்பிரமணியர் கோவிலில் ராஜேந்திர சோழீஸ்வரருக்கு பிரதோஷம் வழிபாடு நடந்தது. காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவனுக்கு பிரதோஷம் வழிபாடு நடந்தது. வடகரை வைத்தீஸ்வரர் கோயில் சிறப்பு பூஜை நடந்தது. வராக நதீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.