உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் முருகன் கோவில்களில் வைகாசி விசாகம்

சூலூர் முருகன் கோவில்களில் வைகாசி விசாகம்

சூலூர்: சூலூர் வட்டார கோவில்களில் நடந்த வைகாசி விசாக திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி, சூலூர் வட்டார முருகன் கோவில்களில், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சின்னியம்பாளையம் வேல்முருகன் கோவில், சூலூர் அறுபடை முருகன் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் மற்றும் கிராமக் கோயில்களில் முருகனுக்கு நேற்று காலை நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமான் அருள பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !