திருமேனிநாதர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1228 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் சிவகாமி அம்பிகா சமேத திருமேனிநாதர் சுவாமி ஆலய, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரர், விநாயகர், வாஸ்து சாந்தி, பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, கோ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை செய்யப்பட்டது. பின்பு யாகசாலையில், பூஜை செய்யப்பட்ட புனிதநீர், கோவில் கோபுரத்திற்கு சிவாச்சாரியர்களால் எடுத்துச் செல்லப்பட்டு, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்பு மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.