காங்கயம்பாளையம் முருகன் கோவிலில் மண்டல பூஜை
ADDED :1548 days ago
சூலூர்: காங்கயம்பாளையம் முருகன் கோவில் மண்டல பூஜை மற்றும் வைகாசி விசாக பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சூலூர் அடுத்த காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கடந்த, 25 ம்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினமும் மண்டல அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது. நேற்று முன் தினம் வைகாசி விசாகத்தை ஒட்டி, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. சந்தன காப்பு மற்றும் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜையில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.