ஜெனகை மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :1324 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா பூக்குழி இறங்கும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து அம்மனை தரிசித்தனர். இக்கோயில் வைகாசி விழா ஜூன் 6 கொடியேற்றத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடக்கிறது. நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை பூக்குழி இறங்கி வழிபட்டனர். ஜூன் 21ல் திருத்தேரோட்டம் நடக்கிறது. பூக்குழியில் தவறி விழுந்து காயமடைந்த இரு பக்தர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். டி.எஸ்.பி., பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.