மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் லட்ச தீபம் : பக்தர்கள் வழிபாடு
ADDED :1247 days ago
சென்னை, : வைகாசி விசாகம், பவுர்ணமியை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், மூன்று நாள் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்வில் இரண்டாம் நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி, சுவாமி தரிசனம் செய்தனர்.சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் கார்த்திகை தீபம் அன்றும் வைகாசி விசாகம், பவுர்ணமியை முன்னிட்டு, மூன்று நாட்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம், பவுர்ணமியை முன்னிட்டு மூன்று நாள் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்வு நடக்கிறது. இந்நிகழ்வின் இரண்டாம் நாளான நேற்று மாலை, கோவில் குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் கூடி, தீபம் ஏற்றி, பின் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலையும், லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.