மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூலை 3 முதல் ஊஞ்சல் உற்ஸவம்
ADDED :1248 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம் ஜூலை 3 முதல் 11 வரை நடக்கிறது. இந்நாட்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி சுவாமி சன்னதியில் உள்ள நுாறு கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளுவார். திருவாசக பாடல்கள் ஓதுவாரால் பாடப்பட்டு நாதஸ்வர கலைஞர்கள் ஒன்பது வகையான ராகத்தில் இசைத்து தீபாராதனை நடக்கும். ஜூலை 5 இரவு முதல் ஆனி உத்திரம் மறுநாள் அதிகாலை வரை வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சுவாமி சன்னதி 6 கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திரம் திருமஞ்சனம் நடக்கும். ஜூலை 13 ஆனி பவுர்ணமியன்று உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு மா, பலா, வாழையால் முக்கனி அபிேஷகம் நடக்கும்.