சௌடாம்பிகை அம்மன் கோவில் கத்தி போடும் திருவிழா
ADDED :1178 days ago
பேரையூர்: பேரையூர் தாலுகா டி.குண்ணத்தூர் சௌடாம்பிகை அம்மன் கோவில் திருவிழா நடந்தது. கடந்த ஒரு வாரமாக காப்பு கட்டி விரதம் இருந்தனர்.. நேற்று காலை மல்லிகை பூவால் கரகம் எடுத்து கத்தி போடும் திருவிழா நடந்தது. கரகம் எடுத்து செல்லும்போது துஷ்ட சக்திகள் அம்மனை அண்ட விடாமல் இருப்பதற்காக பக்தர்கள் கத்தியால் உடலை கீரி ரத்தத்தை காணிக்கையாக செலுத்தும் வினோத பாரம்பரிய நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் கும்மியடித்து அம்மனை தரிசித்தனர்.