உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரணபத்ரகாளியம்மன் கோவில் பூக்குழி விழா

ரணபத்ரகாளியம்மன் கோவில் பூக்குழி விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே மோர்ப்பண்ணை ரணபத்ரகாளியம்மன் கோவில், வைகாசி விசாக விழா, ஜூன் 7-இல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பொங்கல் விழா மற்றும் முளைப்பாரி உற்சவ வீதி உலா நடைபெற்றது. முக்கிய விழாவான பூக்குழி விழாவில், பக்தர்கள் தீச்சட்டி எடுத்து கோவில் முன்பு தீ மிதித்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !