கடலுார் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1250 days ago
கடலுார், கடலுார், கரையேறவிட்டகுப்பம் திரவுபதியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கடலுார், பழைய வண்டிப்பாளையம் கரையேறவிட்டகுப்பத்தில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தீ மிதி உற்சவம் கடந்த மாதம் 31ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவம் இரவு 7:00 மணியளவில் அம்மன் திருக்கல்யாண வைபவம், தொடர்ந்து, திருக்கல்யாண பரிவேட்டை நடந்தது. இரவு கிருஷ்ணர் வீதியுலா நடந்தது.