உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காமீஸ்வரர் கோவிலில் 1008 லிட்டர் பால் அபிஷேகம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் 1008 லிட்டர் பால் அபிஷேகம்

வில்லியனூர் :திருக்காமீஸ்வரர் கோவிலில், 1008 லிட்டர் பால் அபிஷேகம், வரும் 10ம் தேதி நடக்கிறது.விழாவை முன்னிட்டு காலை 10 மணிக்கு கோகிலாம்பிகைக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் துவங்குகிறது. தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடக்கிறது. கோகிலாம்பிகைக்கு நடைபெறும் பால் அபிஷேகத்தில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும், பிள்ளைப் பேறு வரம் கிட்டும் என்பது ஐதீகம். பால் அபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரும் பசும் பால் கொண்டு வரலாம். பால் கொண்டுவர முடியாத பக்தர்கள் கோவிலில் ரூ.50 செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி மனோகரன், சிவாச்சாரியர்கள் மற்றும் சிவனடியார்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !