ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு தங்க கிரீடம் காணிக்கை
ADDED :4848 days ago
ஷீரடி: ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு, 7.82 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 320 கிராம் தங்கத்தினாலான கிரீடத்தை, பக்தர் ஒருவர் நேற்று காணிக்கையாக வழங்கினார். விலை மதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட அந்த தங்கக் கிரீடத்தை வழங்கியவர், பெங்களூருவைச் சேர்ந்த கல்வியாளர். இதற்கு முன், கடந்த 1ம் தேதி, தன்னைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க விரும்பாத பக்தர் ஒருவர், 1.18 கோடி ரூபாய் மதிப்பிலான, இரண்டு வைரக்கற்கள் பதித்த தங்க டாலரை, சாய்பாபா அறக்கட்டளைக்கு காணிக்கையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.