உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரம்ஜான் சிந்தனைகள் -18

ரம்ஜான் சிந்தனைகள் -18

ஓய்வுநேரத்தை பயனுள்ளதாக்குவீர்

ராட்டையில் நூல் நூற்கும் பழக்கம் உடையவர் மகாத்மா காந்தியடிகள். அது போலவே, அரபுநாட்டில் பெண்கள் ராட்டை நூற்கும் பழக்கம் கொண்டிருந்தனர். வீட்டு வேலை இல்லாத ஓய்வு நேரங்களில் வீடுகளில் ராட்டை சுற்றும் சப்தம் கேட்கும். இதைப்பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் போது, ""ராட்டை மனஅமைதியைத் தரும் சாதனம். ராட்டை சுற்றுவது சிறந்த கைத்தொழில், என்றார்கள். பெண்கள் ஓய்வு நேரத்தை வீணடிக்கக் கூடாது. தேவை இல்லாமல் தூங்குதல், "டிவி பார்த்தல், பிறர் தன்னைப் பார்க்க வேண்டுமே என்பதற்காக அளவுக்கு மீறி அலங்காரம் செய்தல், சினிமாவுக்கு செல்வது போன்றவற்றைச் செய்யக்கூடாது.அதற்கு பதிலாக பயனுள்ள தொழில்களான தையல், எம்பிராய்டரி, வீட்டை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளைச் செய்யலாம்.நபிகள் நாயகம் அவர்கள், மெக்காவில் இருந்து மெதீனா சென்ற பிறகு, பெண்ளுக்காக சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். ஆனால், ஒழுங்குமுறைகளுடன் கூட்டப்படும் கூட்டங்களுக்கு மட்டுமே அவர்கள் செல்வார்கள். அவர்களுக்கு போதனை செய்வதுடன், அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்வார்கள். பெண்கள் தங்கள் பொழுதைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது இன்றைய ரமலான் சிந்தனையாக அமையட்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.31


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !