சிவாலயங்களில் சண்டிகேஸ்வரருக்கு நூலைப் போடுவதன் காரணம் என்ன?
ADDED :1283 days ago
சண்டிகேஸ்வரர் சிறந்த சிவபக்தர். எப்போதும் சிவதியானத்திலேயே லயித்திருப்பவர். சினடியார்களிடத்தில் பிரியமுள்ளவர். தவறு செய்பவர்களைக் கண்டிப்பவர். சிவன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு சண்டிகேஸ்வரர் முன்நின்று மெதுவாகக் கையைத்தட்டி ஒலியெழுப்ப வேண்டும். தியானத்திலிருக்கும் சண்டேசர் கண்விழித்து நம்மைப் பார்ப்பார். சிவாலய தரிசனப் பலனைத் தந்தருள வேண்டும் என்று அவரிடம் மானசீகமாக வேண்டிக் கொள்ள வேண்டும். திருக்கோயிலுக்குச் சென்று வந்ததன் முழுப்பலனையும் நமக்கு அருளுவார். வேகமாகக் கையைத் தட்டுதல், நூல் போடுதல் இவையெல்லாம் கூடாது.