உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தடையின்றி வீடு கட்ட...

தடையின்றி வீடு கட்ட...


சொந்தமாக வீடு கட்ட யாருக்கு தான் ஆசை இருக்காது! ஆனால் வீடு கட்ட தொடங்கும் பலர், ‘‘பணம் புரட்ட படாதபாடு பட்டேன். கட்டட வேலை எப்பதான் முடியுமோன்னு தெரியலை!’ என புலம்பும் அளவுக்கு நெருக்கடிக்கு ஆளாவதுண்டு.  
பணப்பிரச்னை ஏதுமின்றி நல்ல முறையில் வீடு கட்டி குடியேற விரும்புபவர்கள் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி மீது திருஞானசம்பந்தர் பாடிய தேவார பதிகத்தை படிப்பது நல்லது. முடியாவிட்டால் பின்வரும் ஒரு பாடலை மட்டும் தினமும் 12 முறை சொல்லலாம். திங்கள் தோறும் சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது சிறப்பு.  
நன்றுடையானை தீயது இலானை நரை வெள்ளேறு
ஒன்று உடையானை உமை ஒருபாகம் உடையானை
சென்று அடையாத திருவுடையானை சிராப்பள்ளிக்
குன்று உடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !