உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி

முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது.

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி சிவகங்கை உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் நாராயணி, கணக்கர் அழகு பாண்டி உண்டியல் எண்ணும் பணி கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சேவைக் குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ரூ. 6 லட்சத்து 57 ஆயிரத்து 553 பணமும், 45 கிராம் தங்கமும், 378 கிராம் வெள்ளியும், 8 வெளிநாட்டு நோட்டுக்களும் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !