பழமையான சிவன் கோயிலுக்குள் மண்டிய புதர் பக்தர்கள் முகம்சுளிப்பு
ADDED :1229 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பழமையான சிவன் கோயிலுக்குள் செடி,புதர் மண்டியுள்ளதால் பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சதுர்வேதமங்கலம் கிராமத்தில் குன்றக்குடி ஆதீன நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில் உள்ளது. பல நூறு ஆண்டு பழமையான இக்கோயில் உள்ளே செடிகளும் புதரும் அதிகம் மண்டி வளர்ந்துள்ளது. கோயிலுக்குள் புதர்கள் மண்டி இருப்பது சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்துகிறது. எனவே கோயிலுக்குள் உழவாரப் பணியை மேற்கொள்ள கோயில் நிர்வாகமும் சிவபக்தர்களும் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.