கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் மீட்பு இருவர் அதிரடி கைது
                              ADDED :1218 days ago 
                            
                          
                          மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில்களில் திருடப்பட்ட சுவாமி சிலைகளை மீட்ட போலீசார், இருவரை கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் தொடர்ந்து கோவில் சிலைகள் மற்றும் சிலைகளில் உள்ள நகைகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்தது. போலீஸ் த னிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், மயிலாடுதுறை அருகே உள்ளக டலங்குடி கார்த்திகேயன், 38, தஞ்சாவூர் மாவட்டம், இடை யநல்லுார் பாஸ்கர், 42 ஆகியோர் தான் சிலைகளை திருடியது தெரிந்தது. இதை யடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கருங்கல் பிள்ளையார் சிலை , பித்தளை பூஜை மணிகள், உலோகச்சிலைகள் போன்ற பல பொருட்களை போலீசார் கைப்பற்றினர். குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து, சிலைகள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.