உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோச்சேரி மோசூரம்மன் கோவிலில் தேரோட்ட விழா

மோச்சேரி மோசூரம்மன் கோவிலில் தேரோட்ட விழா

மதுராந்தகம்: மோச்சேரி மோசூரம்மன் கோவிலில், இன்று தேரோட்டம் நடக்கிறது. மதுராந்தகம் நகராட்சி மோச்சேரியில் மோசூரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத உற்சவம் நடப்பது வழக்கம்.நடப்பு ஆண்டிற்கான இந்த விழா, ஜூன் 28ம் தேதி துவங்கியது. அன்று காலை 10:00 மணிக்கு பால் குட ஊர்வலமும், மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும் வைக்கப்பட்டது.இரவு 10:00 மணிக்கு இன்னிசை நாதஸ்வர மேள கச்சேரியும், நள்ளிரவு 1:00 மணிக்கு, அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று இரவு தெய்வீக நாடகம், அம்மன் வீதியுலா நடந்தது. தவிர, அலகு குத்துதல், கொக்கி போடுதல், எடைக்கு எடை காசு போடுதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். இன்று, மோசூரம்மன் தேரில் எழுந்தருள்கிறார். மாலை 3:00 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன், இவ்விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !