ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் இஸ்ரோ சேர்மன் மற்றும் விஞ்ஞானிகள் தரிசனம்
ADDED :1391 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இன்று இஸ்ரோ சேர்மன் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் ஸ்ரீகாளஹஸ்தீஷ்வரரை தரிசனம் செய்தனர். அவர்களை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் இன்று நெல்லூர் மாவட்டம் சூலூர் பேட்டையில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் ஏவ உள்ள பிஎஸ்எல்வி சி 53 வெற்றியடைய வேண்டும் என்று ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்( PSLV-C53 மாதிரியை )முன் வைத்து வேண்டிக் கொண்டனர். ஸ்ரீ காலஹஸ்திஸ் ஞானப்பிரசன்னாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தியதோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் கோயில் சார்பில் அதிகாரிகள் வழங்கினர்.