உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லையம்மன் கோவில் உண்டியலில் ரூ.8.37 லட்சம் காணிக்கை

எல்லையம்மன் கோவில் உண்டியலில் ரூ.8.37 லட்சம் காணிக்கை

அச்சிறுப்பாக்கம்: பெரும்பேர்கண்டிகை எல்லையம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அச்சிறுப்பாக்கம் அருகே, பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் எல்லை அம்மன் கோவில் உள்ளது.இங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல் காணிக்கை, அறநிலையத் துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் உத்தரவுப்படி நேற்று திறக்கப்பட்டது.இதில் பக்தர்களின் காணிக்கையாக 8.37 லட்சம் ரூபாய் இருந்தது. 288 கிராம் தங்கம், 492 கிராம் வெள்ளி கிடைத்தன.கோவில் செயல் அலுவலர் அமுதா மேற்பார்வையில், காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !