உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரை 18 வாலிபர்கள் ஒலியுல்லாஹ் தர்காவில் கொடியேற்றம்

கீழக்கரை 18 வாலிபர்கள் ஒலியுல்லாஹ் தர்காவில் கொடியேற்றம்

கீழக்கரை: கீழக்கரை ஓடைக்கரை பள்ளிவாசல் அருகே 18 வாலிபர்கள் ஷஹீது ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது.

இங்கு நேற்று மாலை 6 மணியளவில் 18 வாலிபர்கள் ஒலியுல்லாஹ் தர்கா முன்புறமுள்ள கொடி மேடையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. புனித மக்பாராவில் பச்சை போர்வை போர்த்தப்பட்டு, மளிகைச் சரங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உலக நன்மைக்காக மௌலிது (புகழ் மாலை) ஓதப்பட்டது. தொடர்ந்து 18 நாட்களும் தர்காவில் மெளலீது ஓதி தப்ரூக் எனும் நெய்சோறு வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை 18 வாலிபர்கள் தர்கா பரிபாலன கமிட்டி ஹாமீது இப்ராஹிம், சதக் இலியாஸ், சீனி முகம்மது, ஜாகிர் உசேன், சாகுல் ஹமீது, முகம்மது இப்ராஹிம், ராசிக் பரிது உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். தர்கா கொடியேற்றத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !