/
கோயில்கள் செய்திகள் / ஆறு கிரகங்கள் வரிசையாக ஆட்சி.. கிரக மாலிகா யோகம் : தட்சிணாமூர்த்தி கோயிலில் மஹா சண்டி யோகம்
ஆறு கிரகங்கள் வரிசையாக ஆட்சி.. கிரக மாலிகா யோகம் : தட்சிணாமூர்த்தி கோயிலில் மஹா சண்டி யோகம்
ADDED :1193 days ago
பழநி: பழநி, கோதைமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில் வளாகத்தில் கிரக மாலிகா யோகம் அமையும் நாளை முன்னிட்டு மஹா சண்டி யோகம் நடைபெற்றது.
பழநி, கோதைமங்கலம் தட்சிணாமூர்த்தி ஆலய வளாகத்தில் மஹா சண்டி ஹோமம் நடைபெற்றது. பல நூறு ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் இருந்து கடக ராசி வரை ஆறு கிரகங்கள் வரிசையாக ஆட்சி பெற்று ராசியில் உள்ளது. இந்த கிரகமாலிக யோகத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு மஹா சண்டி ஹோமம் துவங்கியது. இதற்கு முன்னதாக கணபதி பூஜை, கஜ பூஜை, துரக பூஜை, கோ பூஜை ஆகியவை நடைபெற்றது. ஹோமத்தை சுகிசிவம் நடத்தி வைத்தார். இதில் சித்தநாதன் அண்ட் சன்ஸ் தனசேகரன், சாய் கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், வாழிய உலக நல நற்பணி மன்ற தலைவர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.