கோயில் கருவறை முன்பு இரு பெரிய சிலைகள் நிற்பதன் தத்துவம் என்ன?
ADDED :1204 days ago
அவை துவாரபாலகர் சிலைகள். சிவன் கோவிலில் ஆட்கொண்டார், உய்யக் கொண்டார் என்றும், விஷ்ணு கோவில்களில் ஜய, விஜயர் என்றும் இவர்கள் அழைக்கப்படுவர். வாசலில் நிற்கும் இவர்கள் கைலாயம், வைகுண்டத்தில் காவல் புரிவதாக ஐதீகம். இவர்களை வணங்கி அனுமதி பெற்ற பின், கடவுளை தரிசிப்பது மரபு.