உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பணாமணீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா

பணாமணீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா

காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம் பணாமணீஸ்வரர் கோவிலில், மாணிக்கவாசகர் குருபூஜை, திருவிளக்கு பூஜை மற்றும் 108 பால்குட விழா நேற்று நடந்தது.சின்ன காஞ்சிபுரம், திருவள்ளுவர் தெருவில் மாகாளியம்மன் சமேத பணாமணீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாணிக்கவாசகர் குருபூஜை, திருவிளக்கு பூஜை, 108 பால்குட விழா நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு ஆண்டுக்கான, ஏழாம் ஆண்டு விழா நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 7:00 மணிக்கு திருவாசக முற்றோதுதலும், 9:00 மணிக்கு சிவபூதகன திருக்கயிலாய வாத்தியம் இசைக்க, ஒதுவார்கள் திருவாசகம் ஓத, மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய மாணிக்கவாசகர் வீதியுலா சென்றார். ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பால்குடம், பகல் 12:00 மணிக்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்ட, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து, மஹாதீப ஆராதனையும் நடந்தது.ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சிவனடியார்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !