தேடுங்கள்... கிடைக்கும்
ADDED :1205 days ago
* தீவிரமாக தேடினால் எதுவும் கிடைக்கும்.
* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர். துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்.
* பிறரை வஞ்சித்துவிட்டு, ‘விளையாட்டுக்குச் செய்தேன்’ என சொல்பவர் பைத்தியக்காரர்.
* தான் வெட்டின குழியில் தானே விழுவர்.
* தான் புரட்டின கல் தன் மேலேயே விழும்.
* நேர்மையாளரின் கருத்துக்கள் நியாயமானவை; பொல்லாதவரின் திட்டங்கள் வஞ்சகமானவை.
* கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.
* ஒளிதான் எல்லா நன்மைகளையும், உண்மைகளையும் விளைவிக்கிறது.
– பொன்மொழிகள்