மதுரை மயில்வேல் முருகன் கோயிலில் புனரமைப்பு பணி
ADDED :1274 days ago
மதுரை, மதுரை மேலக்கால் மெயின் ரோடு கோச்சடையில் மயில்வேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புதிய 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம், ஷஷ்டி மண்டபம் அமைத்தும், விநாயகர், ஆஞ்சநேயர், தட்சனாமூர்த்தி, லட்சுமி ஹயக்கீரிவர், ஜயப்பன், எல்லாம் வல்ல சித்தர், துர்க்கா தேவி, நவகிரஹ சந்நிதிகளுடன் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள பார்வதி பரமேஸ்வரர், வைரவர், மயில்வேல் முருகன் கோபுரங்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான செலவு நாற்பது லட்சம் என் மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை டிரஸ்டிகள் செய்து வருகின்றனா். கோயிலுக்கு நன்கொடை, நிதியுதவி அளிக்க விரும்பும் பக்தர்கள் R.சுவாமிநாதன் – 9500465786, ஹரிஹரன் – 99943 73270, சிவராமன் – 99946 50033 ஐ தொடர்பு கொள்ளலாம்.