உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா சுவாமி அம்பாள் வீதி உலா

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா சுவாமி அம்பாள் வீதி உலா

திருநெல்வேலி : நெல்லையப்பர் ஆனித் திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று இரவு, சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளிக்கமல வாகனத்திலும் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிக்கின்றனர். நேற்று இரவு இரண்டாம் நாள் விழாவில் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளிக்கமல வாகனத்திலும் வீதி உலா வந்து அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 11ம் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !