சிதம்பரம் நடராஜர் ஆனித் தேரோட்டம்: வா வா நடராஜா கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்
ADDED :1198 days ago
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த வரும் ஆனித் திருமஞ்சன விழாவில் இன்று காலை பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் துவங்கியது பக்தர்கள் பரவசமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்து வரும் ஆனித் திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று காலை பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. நடந்த பஞ்சமூர்த்தி தேர் திருவிழாவில் வா வா நடராஜா என கோஷமிட்டு பக்தர்கள் படம் பிடித்து இழுக்க நடராஜா தேர் ஆடி அசைந்து வந்தது அதன் பின்னால் சிவகாமசுந்தரி தேர் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.