சாக்கோட்டை: சாக்கோட்டையில் உள்ள சாக்கை உய்யவந்தம்மன கோயில் ஆனித் திருவிழாவின முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.சாக்கை உய்யவந்தம்மன் கோயில் ஆனித்திருவிழா கடந்த ஜூன் 28ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான பால்குட திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. தினமும் காலை மற்றும் இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. பக்தர்கள் மாவிளக்கு வைத்தும், தீச்சட்டி, பறவைக்காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் சாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.