சின்னசேலம் அம்மன் கோவிலில் உறியடி விழா
ADDED :4829 days ago
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு உறியடி திருவிழா மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாமிக்கு காலை 7.30 மணிக்கு பதினேழு வகையான அபிஷேகங்கள் நடந்தது. சுவாமிக்கு வெள்ளி பீடத்துடன் நகை அலங்காரம் செய்து, காலை 9 மணியளவில் மகா தீபாராதனை நடத்தினர். தொடந்து ஆர்யவைஸ்ய விபாக் மற்றும் வனிதா கிளப் சார்பில் பெண்கள் பஜனை பாடினர். பின் உறியடி நிகழ்ச்சி நடந்தது. மூலவர் அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்தனர்.