உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் விழாவில் சிறப்பு ஆராதனை

கோவில் விழாவில் சிறப்பு ஆராதனை

வில்லியனூர்: வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவில் செடல் உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வில்லியனூர் மார்க்கெட் வீதியில் உள்ள ஏழை மாரியம்மன் கோவில் 84ம் ஆண்டு செடல் உற்சவ விழா கடந்த 6ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் காலை 10 மணிக்கு அபிஷேகமும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்து வருகிறது. நேற்று பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இன்று 10ம் தேதி அரங்கர் அனந்தசயனமும், 13ம் தேதி முத்துப்பல்லக்கு விழா நடக்கிறது. பொது உற்சவமாக 14ம் தேதி செடல் உற்சவமும், இரவு புஷ்ப மின் அலங்கார தேர் பவனியும் நடக்கிறது. 15ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 16ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !